Tuesday, March 18, 2008

ஏர்போர்ட் விரிவு: முதல்வர் உறுதி

சென்னை, மார்ச் 18: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தடையின்றி நிறைவேறும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட யாருக்காகவும் அரசின் செயல்பாடுகள் தடைப்படாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் சிக்கலில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியை முதல மைச்சர் கருணாநிதி மறுத்திருக்கிறார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் இடியாப்ப சிக்கலில் உள்ளது என்று செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அரசின் சார்பில் இது போன்ற திட்டங்கள் விரைவாகவும், தடையின்றியும் நடைபெற வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் எந்தவொரு திட்டத்தைத் தொடங்கினாலும், அதற்கு முட்டுக்கட்டைகள் ஏதோ ஒரு வழியில் வரத்தான் செய்கின்றன. மற்ற மாநிலங்களில் இது போன்ற செயல்கள் விரைவாக நடைபெற்று விட்டன என்றால், அங்கே இது போன்ற திட்டங்களில் தடை ஏற்படுத்த வேண்டுமென்று நினைப் பவர்கள் அவ்வளவாக இல்லை என்பது தான். விமான நிலைய விரிவாக்கத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து, அதற்காகவே தலைமைச் செயலகத்தில் கூட்டம் ஒன்றையும் நடத்தி அதிலே தான் முடிவெடுத்திருக்கிறோம்.

ஆனால் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள நாளேடு, அங்கே கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் பெரும்பாலானவை முக்கிய பிரமுகர்களுக்கு சொந்த மானது என்றும், அவர்களால் தான் கையகப்படுத்தும் பணி தாமதமா கிறது என்றும் எழுதியிருக்கின்றது. இந்தச் செய்தியிலே எள்ளளவும் உண்மையில்லை. ஒரு சில நில உரிமையாளர்கள் நீதிமன்றங் களுக்குச் சென்று சுலபமாக தடையாணை பெற்று விடுகிறார்கள். அதுபோன்ற சம்பவங்களில் மேல் முறையீடு செய்து நீதிமன்றங்களின் முடிவைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அதுதான் தாமதத்திற்கான உண்மைக் காரணமே தவிர தனிப்பட்ட யாருக்காகவும் இந்தத் திட்டம் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கவில்லை.

1989, 90 ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் ஒரு மின் திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக நிலத்தை கையகப் படுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அந்த நிலத்தின் உரிமை யாளர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள்.அவர்கள் தர இயலாது என்று கூறிய போது, அந்த இடத்திலே மின் திட்டத்தை தொடங்கி தமிழக மக்களுக்கு உதவிட வேண்டும், எனவே அதனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பதில் கூறி அவர்களுடைய ஒத்துழைப்போடு அந்த இடத்தை கையகப் படுத்தினோம்.முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை அழைத்து அந்த திட்டத்தை துவக்கி வைத்து இன்றளவும் அந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, தனிப்பட்ட யாருக்காகவும் இந்த அரசின் செயல்பாடுகள் தடைபடாது.

http://www.maalaisudar.com/newsindex.php?id=10993%20&%20section=1

No comments: